ரணிலின் கைதின் பின் அநுரவால் சர்வதேசத்திற்கு பறந்த செய்தி..!
உள்நாட்டு நீதிபொறிமுறையில் நீதியுள்ளது என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்க வேண்டிய தேவையுள்ள அநுர அரசு ரணில் விக்ரமசிங்கவை நிரூபித்துள்ளது என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் பாலகிருஸ்ணன்(பாலா மாஸ்டர்) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியியல் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அதாவது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் சர்வதேசத்துடன் தொடர்புடைய அதாவது லண்டன் விஜயத்திற்காக கைது செய்யப்பட்டால் தான் பேசுபொருளாகும் என்ற ரீதியில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் எதிர்த்தரப்பினரில் பலமாக உள்ளவர்கள் மீது கைவைக்க வேண்டும் என்ற ரீதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...



