பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக பிடியாணை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
42 கிலோ ஹெரோயின் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக பெக்கோ சமனுக்கு எதிராக எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கு தொடர்பாக பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டு்ள்ளார்.
இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பியதும்
பெக்கோ சமனின் மனைவி நேற்றுமுன்தினம் (29) இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பியதும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ளார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam