ரணிலின் மேற்கத்தைய ஆடைகளின் பின்னணி... அநுர மேற்குலகுக்கு கூறும் செய்தி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்குலகுக்கு சார்பானவர் என்பதாலேயே அவர் எப்போதும் மேற்கத்தைய கலாசாரத்தின் ஆடைகளை அணிவதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மேற்குலகுக்கு சார்பானவராகவும் லிபரல் வாதியாகவும் தன்னை காட்டிக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, சிங்கள பௌத்த கலாசாரத்தை விரும்பும் மக்களிடத்தில் தன்னை நிலைநாட்ட தவறினார்.
இதனால், ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டில் ஒரு பலவீனமான தலைவராகவே தொடர்ந்தும் திகழ்ந்தார்.
இதனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், சட்ட நடவடிக்கையை எடுக்க முதலாவதாக ரணிலை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
இதன்மூலம், நாட்டின் சட்டவாட்சி பலமாக இருப்பதாகவும் அநுர அரசாங்கம் மேற்குலகுக்கு அறிவித்துள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது சக்கரவியூகம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



