பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் அதிரடியாக கைது
பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதாம்டன் பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் வழங்கி அவரை சீண்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி சவுதாம்டன் நகரின் போலிகோன் பகுதியில் வைத்து பாலியல் சீண்டல் செய்யப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் இளைஞன் கைது
சம்பவம் தொடர்பில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 21 வயதான வியான் சுரேந்திரநாதன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டார்.

பாலியல் சீண்டல், பாலியல் ரீதியாகத் சீண்டல் செய்யும் நோக்கத்தில், அந்தப் பெண்ணின் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய மயக்க மருந்து அல்லது போதைப்பொருள் வழங்கியமை, 'Class A' வகையைச் சேர்ந்த அபாயகரமான போதைப்பொருளைத் தன்னிடம் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.