மன்னாரில் வனவள திணைக்கள காணிகளில் மக்கள் உளுந்து பயிரிட அனுமதி (Photos)

Mannar Sri Lanka Parliament Sri Lanka Food Crisis
By Ashik Dec 24, 2023 09:52 PM GMT
Report

மன்னார் - கட்டையடம்பன் பகுதியில் வனவள திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் மக்கள் உளுந்து பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் வனவளத் திணைக்களம் மரம் நடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நீண்ட நாட்களாக மக்கள் பயன்படுத்திய காணியினை அண்மையில் வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்தது காடாக மாற்றி மரம் நடும் திட்டத்திற்கான நிதியும் ஒதுக்கீடு செய்திருந்தது.

இவ்வாறான நிலையில் கட்டையடம்பன் பகுதியில் தொடர்ச்சியாக பொதுமக்கள் மற்றும் வனவள திணைக்களத்திற்கு இடையில் முரண்பாடு நிலவி வந்தது.

கனடாவில் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு

கனடாவில் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு

மக்களின் கோரிக்கை

இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கே. திலீபன் வனவளத் திணைக்களத்தினரோடு மேற்கொண்ட கலந்துரையாடல் அடிப்படையில், மாவட்ட அரசாங்க அதிபர் சிபாரிசு செய்யும் பட்சத்தில் குறித்த காணிகள் மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக வனவள திணைக்களத்தினர் தெரிவித்திருந்தனர்.

மன்னாரில் வனவள திணைக்கள காணிகளில் மக்கள் உளுந்து பயிரிட அனுமதி (Photos) | People Are Allowed To Cultivate Ulu In Mannar

மன்னாரில் வனவள திணைக்கள காணிகளில் மக்கள் உளுந்து பயிரிட அனுமதி (Photos) | People Are Allowed To Cultivate Ulu In Mannar

இந்த நிலையில் மாவட்ட செயலகம் காணிகளை விடுவிப்பதற்கு பதிலாக காடாக மாற்றுங்கள் என்கிற அர்த்தத்துடன் வனவள திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பியதாக வனவள திணைக்களம் தெரிவித்திருந்தது.

இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட பயங்கர வெடி விபத்து: 13 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்

இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட பயங்கர வெடி விபத்து: 13 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்

வனவள திணைக்கள அதிகாரி

இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் தொடர் முயற்சி காரணமாக வனவள திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் மக்கள் உளுந்து பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் வனவளத் திணைக்களம் மரம் நடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் வனவள திணைக்கள காணிகளில் மக்கள் உளுந்து பயிரிட அனுமதி (Photos) | People Are Allowed To Cultivate Ulu In Mannar

அதே நேரம் குறித்த காணியை பராமரிப்பதற்கு என்றும் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கும் என ஒரு தொகை பணமும் அப்பகுதி மக்களுக்கு வனவள திணைக்கள அதிகாரிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி உதவி வழங்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கே. திலீபன், வனவள திணைக்கள அதிகாரிகள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சீவரட்ணம் (கி.பி), மன்னார் மாவட்ட இளைஞரணி உதவி நிர்வாகச் செயலாளர் சீலன் மற்றும் செல்வகுமார், விஜயகாந்த், மரியசெல்வம் உட்பட பயனாளர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் வனவள திணைக்கள காணிகளில் மக்கள் உளுந்து பயிரிட அனுமதி (Photos) | People Are Allowed To Cultivate Ulu In Mannar

இந்திய பெருங்கடலில் சிக்கித்தவிக்கும் 185 புலம்பெயர்ந்தோர்: பலர் உயிரிழக்கலாமென எச்சரிக்கை

இந்திய பெருங்கடலில் சிக்கித்தவிக்கும் 185 புலம்பெயர்ந்தோர்: பலர் உயிரிழக்கலாமென எச்சரிக்கை

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US