கனடாவில் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு
கனடாவில் பணவீக்கம் காரணமாக பண்டிகைக் காலத்தில் கனேடியர்கள் தங்களது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கனடாவில் உணவு வங்கிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கனடாவில் அதிகரிக்கும் பணவீக்கம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொருட்களின் விலை அதிகரிப்பு
கனடாவில் ஆறு பேரைக் கொண்ட குடும்பமொன்றின் மரபு ரீதியான நத்தார் இராப்போசன விருந்துபசாரத்திற்கு சராசரியாக 104.85 டொலர்கள் தேவைப்படும்.
தற்போது அந்நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நத்தார் மற்றும் புத்தாண்டு கால வழமையான செலவுகளை வரையறுத்துக் கொண்டுள்ளனர்.
இதனால் உறவினர்கள நண்பர்களுக்கு வழங்கப்படும் விருந்துகளும் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், கனடாவில் மாகாணத்திற்கு மாகாணம் உணவுப் பொருட்களின் விலைகளில் பாரியளவு மாற்றங்கள் பதிவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
