இந்திய பெருங்கடலில் சிக்கித்தவிக்கும் 185 புலம்பெயர்ந்தோர்: பலர் உயிரிழக்கலாமென எச்சரிக்கை
இந்திய பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவில் படகில் கவிழ்ந்த 185 ரோஹிங்கியா புலம்பெயர் மக்களை அவசரமாக மீட்க ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த படகில் இருந்தவர்களில் 70 பேர் குழந்தைகள் என்றும், 88 பேர் பெண்கள் என்றும் UNHCR அகதிகள் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களில் பத்திற்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.

பலர் உயிரிழக்கலாமென எச்சரிக்கை
மேலும், உரிய நேரத்தில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மேலும் பலர் உயிரிழக்க நேரிடும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
ரோஹிங்கியா மக்களை மீட்பதற்காக சுற்றியுள்ள அனைத்து கடலோர அதிகாரிகளையும் தொடர்பு கொள்வதாகவும் UNHCR செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு முதல், இப்பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் உட்பட 570க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன்,காணாமல் போயுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam