ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடரும் போராட்டம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், தேரர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று காலை வரை (16) தொடர்கின்றது.
பேரணி காரணமாக அதிகளவான பொலிஸார் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
தலதா மாளிகையின் வளாகத்தில் அமைந்துள்ள வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபேரணி நேற்று கொழும்பினை வந்தடைந்தது.

நடைபேரணியில் பங்கேற்றிருந்த தேரர்கள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலாளருடன் கலந்துரையாடலை கோரி ஜனாதிபதி செயலக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தேரர்கள் கூடியிருக்கும் பகுதிக்கு ஜனாதிபதி செயலாளர் சென்று கலந்துரையாடலில ஈடுபட்டிருந்தார்.
இதன்போது, கலகோட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என மகா சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த பேரணி காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.






