யாழ்ப்பாணத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம்

Jaffna
By Kamal Oct 16, 2026 12:04 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் சுமார் 85 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும் பணம் மற்றும் சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவுகளை இலங்கை காவல்துறை சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.

விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை 

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட இரு மாடி வீடு மற்றும் 15 மில்லியன் ரூபா ரொக்கம் ஆகியவை இதில் அடங்கும்.

யாழ்ப்பாணத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் | 85 Million In Property Cash In Jaffna

கடந்த 2023 ஆகஸ்ட் 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபா ரொக்கத்துடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ஒரு லாரியும் கைப்பற்றப்பட்டது.

மேற்கண்ட விசாரணைகளின் மூலம், மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் பணத்தைக் கொண்டு இந்த இரு மாடி வீட்டைக் கட்டியுள்ளமை கண்டறியப்பட்டது.

கைது நடவடிக்கை

ஆரம்ப கைது நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட 15 மில்லியன் ரூபா ரொக்கம் தற்போதும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளது.

இதற்கமைய, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வீடும் பணமும் அக்டோபர் 15, 2026 முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

இலங்கை வந்த வெளிநாட்டு பெண் மீது தாக்குதல் - சந்தேக நபர் தப்பியோட்டம்

இலங்கை வந்த வெளிநாட்டு பெண் மீது தாக்குதல் - சந்தேக நபர் தப்பியோட்டம்

 

மைத்திரியின் தவறை அநுர சரிசெய்தால் மீண்டும் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு

மைத்திரியின் தவறை அநுர சரிசெய்தால் மீண்டும் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US