முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்களை இரத்து செய்ய முடியாது - வாதிடும் உதய கம்மன்பில
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பாக, அவர்களின் ஓய்வூதியங்களைக் குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என்று பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில வாதிட்டுள்ளார்.
இது, அரசியலமைப்பு மற்றும் உலகளாவிய சட்டக் கொள்கைகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“தேசிய மக்கள் சக்தியின் அறிக்கையில் ஓய்வூதிய சலுகைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சாத்தியப்படாது.
ஓய்வூதிய சலுகை
எனவே, தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தை உருவாக்கிய குழுவில் நியாயமான சட்ட அறிவைக் கொண்ட எவரும் பணியாற்றியதாகத் தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

அரசியலமைப்பின் 36 (2) ஆவது பிரிவின் படி, நாட்டின் ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றவுடன், நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு அவர் உரிமை பெறுவார்.
அதன் பிறகு, அத்தகைய ஓய்வூதியத்தைப் பெறுவதற்கும் அவர் உரிமை பெறுவார். சட்டபூர்வமான எதிர்பார்ப்பு கோட்பாட்டின் படி, ஓய்வூதிய சலுகைகளை பின்னோக்கிச் செயல்படுத்தும் வகையில் அவற்றை குறைக்க முடியாது.

பொதுவாக தாம் எதிர்பார்க்கும் ஓய்வூதிய சலுகைகளுக்கு ஏற்பவே பொதுமக்கள், தங்கள் ஓய்வு வாழ்க்கையைத் திட்டமிடுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam