சர்ச்சையில் சிக்கிய ரணில் கையொப்பமிட்ட கடிதம்! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோது, அவரது கடிதத் தலைப்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஜனாதிபதிக்கான கடிதத் தலைப்பில் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் விசேட உத்தரவு என்ற தலைப்பில் ஒரு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் தென் மாகாணத்தில் மோசடி செயற்பாடுகளை மேற்கொள்ளும் வர்த்தகர் ஒருவருக்கு அவரது மோசடி நடவடிக்கைகளை முன் கொண்டு செல்ல இடையூறு விளைவிக்க வேண்டாம் என்றவாறான முறைகேடான உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவு
குறித்த கடிதத்தின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அது மாத்தறை தபால் அலுவலகத்தில் இருந்து தபால் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கடிதம் போலியானதாக இருக்கலாம் என்ற ஊகத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன, அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
அதன் பிரகாரம் தற்போதைக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

பிறந்து 15 நாள் ஆன குழந்தையை ஃப்ரிட்ஜில் வைத்த தாய்.., பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம் News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
