யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

Mahinda Rajapaksa Yoshitha Rajapaksa Law and Order
By Dharu Jan 28, 2025 02:22 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பல தனிப்பட்ட தகவல்கள் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வெளிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரத்மலானை சிறிமல் உயன பகுதியில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கியது தொடர்பான பணமோசடி  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஜனவரி 25 ஆம் திகதி பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி

நீதிமன்ற அறிக்கை

மேலும், வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது பல விடயங்கள் வெளிவந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பிலான நேற்றைய நீதிமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள் | Information Revealed In Yoshitha S Investigation

“சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் கைவிலங்கு போடப்படவில்லை.

ஆனால் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது கைவிலங்கு போடப்பட்டிருந்தார்.

இதன்போது மேலதிக  மன்றாடியார் நாயகம்  திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, சந்தேக நபருக்கு எதிரான இந்த சட்ட நடவடிக்கை தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு அல்ல என்றும், பணமோசடியின் கீழ் அவருக்கு எதிராக வேறு பல வழக்குகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

விசாரணை அதிகாரிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின்படி, கேள்விக்குரிய சொத்தின் பெயரளவிலான உரிமையாளர் டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் என்றும், அவர் சந்தேக நபரின் உறவினர்(பாட்டி) என்றும் கூறப்பட்டுள்ளது.

என் இனமே என் சனமே உன்னை உனக்கே தெரிகிறதா..!

என் இனமே என் சனமே உன்னை உனக்கே தெரிகிறதா..!

12.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம்

இருப்பினும், 2012 வரை அவருக்கு அசையா சொத்து எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் 1971 ஆம் ஆண்டு ஒரு மருத்துவமனையில் 275 மாத சம்பளத்திற்கு சமையலறை பராமரிப்பாளராக பணிபுரிந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.

யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள் | Information Revealed In Yoshitha S Investigation

இதன்படி டெய்சி ஃபோரஸ்ட் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மற்றைய அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறவினரான பாலித கமகேயின் குடும்ப உறுப்பினர் ஒருவரால் இந்த சொத்தை வாங்குவதற்காக 24 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் பாலித கமகே இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, சாலை மேம்பாட்டு குத்தகையை பெறுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் பணிபுரிந்த, ஒருவருக்கு 12.5 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியதாகக் விசாரணையின் போது கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு முக்கியமான விடயமாக, பரிவர்த்தனையின் போது, ​​யோஷித ராஜபக்ச யசாரா அபேநாயக்க என்ற இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சாட்சியமளித்த யாசாராவின் மாமாவான வசந்த ஜெயசூரிய, சொத்தை தாம் வாங்கத் தயாராக இருப்பதாகக் முன்னதாக கூறியுள்ளார்.

யோஷிதவிற்கு பிணை விவகாரம்! அரசாங்க தரப்பு விளக்கம்

யோஷிதவிற்கு பிணை விவகாரம்! அரசாங்க தரப்பு விளக்கம்

யோஷித ராஜபக்ச

ஆனால் யாசரவும் யோஷிதவும் திருமணம் செய்து கொண்ட பிறகு,  குடியேற ஒரு வீடு தேவை என்று கூறி சொத்தை தனக்கு வழங்குமாறு யோஷித ராஜபக்ச கோரியுள்ளார்.

சம்பந்தப்பட்ட சொத்தின் பத்திரத்தைப் பெற யோஷித ராஜபக்ச ஒரு பாதுகாப்பு அதிகாரி மூலம் 34 மில்லியன் ரூபாயை அனுப்பியதாக வசந்த ஜெயசூரிய மேலும் கூறியுள்ளார்.

யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள் | Information Revealed In Yoshitha S Investigation

முன்னதாக யோஷித 2007 இல் கடற்படையில் சேர்ந்துள்ளார். பின்னர் லெப்டினன்ட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மற்றும் 2016 இல் அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படும் வரை அந்தப் பதவியில் பணியாற்றினார் என்று மன்றாடியார் நாயகம் மேலும்நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

அப்போதைய அவரது மாத சம்பளம்  73,000 ரூபாய் ஆகும், மேலும் அந்தத் தொகை ஒருபோதும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர, தெஹிவளை பகுதியில் டெய்சி ஃபோரஸ்ட் பெயரில் 500 இலட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மற்றொரு நிலம் தொடர்பாகவும் வழக்கு இதன்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழில் இடம்பெறும் விபத்துகள்! பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி

யாழில் இடம்பெறும் விபத்துகள்! பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி

பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்கள்

மேலும் அந்த நிலம் பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்களை விற்று வாங்கப்பட்டதாக மேல் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளின் பின்னர், யோஷிதவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.

யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள் | Information Revealed In Yoshitha S Investigation

வழக்கின் முதல் சந்தேக நபரான  டெய்சி ஃபாரெஸ்ட் 2016 இல் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கோப்பு 2017 இல் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உண்மைகளை பரிசீலித்த பின்னர், மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க தனது உத்தரவை அறிவிக்கும் போது, ​​வழக்கு ஏற்கனவே எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதால், சந்தேக நபரை மேலும் விசாரணைக்காக தடுத்து வைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

பணமோசடி சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் முதலில் செய்ய வேண்டியது கேள்விக்குரிய சொத்தை முடக்குவதுதான் என்றாலும், அது இதுவரை நடக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, சந்தேக நபரான  யோஷித ராஜபக்சவை தலா 500 இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அவரது வெளிநாட்டு பயணத்தை தடை செய்யவும், சாட்சிகளின் தொடர்பிலும் நீதிமன்றத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு மே 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US