யாழில் இடம்பெறும் விபத்துகள்! பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Independent Writer Jan 28, 2025 12:22 AM GMT
Report

அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் மரணங்கள், அங்கவீனங்கள் போன்றன ஏற்படுகின்றன.

அந்தவகையில் இந்த விபத்துக்களுக்கு கட்டாக்காலி கால்நடைகள், மது போதையில் சாரத்தியம், அவதானமின்மை, வீதி விதிமுறைகளை பின்பற்றாமை, அதிக வேகம் மற்றும் உறக்கம் என்பன காணப்படுகின்றன.

அத்துடன் பொலிஸாரின் செயற்பாடுகளும் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யோஷிதவின் கைதை தொடர்ந்து இலங்கையிலிருந்து தப்பியோடிய பிரபல அரசியல்வாதி

யோஷிதவின் கைதை தொடர்ந்து இலங்கையிலிருந்து தப்பியோடிய பிரபல அரசியல்வாதி

போக்குவரத்து பொலிஸார்

போக்குவரத்து பொலிஸார், வாகனங்களை நிறுத்தக் கூடாத இடங்களான வீதி ஓரத்தில் உள்ள மஞ்சள் கோடு, வீதியின் திருப்பங்கள் போன்ற இடங்களில் நின்று வாகனங்களை மறிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெறும் விபத்துகள்! பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி | Dissatisfaction With Police Actions

அத்துடன் இரவு வேளைகளில் கடமையில் இருக்கும் போக்குவரத்து பொலிஸார் இருள்சூழ்ந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு டோர்ச லைட்டின் ஒளியினை வீதியில் செல்லும் சாரதிகளின் கண்களை நோக்கி பாய்ச்சி அவர்களை மறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவும் விபத்துகள் ஏற்பட காரணமாக அமைவதாக சாரதிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இதன்படி இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு - சித்தங்கேணி வீதியில் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஸ்டித்து போராட்டம்

சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஸ்டித்து போராட்டம்

இரண்டும் திடீர் திருப்பங்கள்

குறித்த பகுதியில் ஆபத்தான இரண்டும் திடீர் திருப்பங்கள் காணப்படுகின்றன.

அந்த வீதி ஓரத்தில் மஞ்சள் கோடும் காணப்படுகின்றன. அந்த திருப்பத்தில் பொலிஸார் நிற்பது இரண்டு பக்கத்தில் இருந்து வரும் வாகனங்களின் சாரதிகளுக்கும் தெரியாத நிலைகாணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் இடம்பெறும் விபத்துகள்! பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி | Dissatisfaction With Police Actions

வீதியால் வரும் வாகனங்களின் கண்களில் தாங்கள் தென்படாது இருப்பதற்காகவே அந்த பகுதியில் நின்று வாகனங்களுக்கும், சாரதிகளுக்கும், பயணிகளுக்கும் ஏற்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வாகனங்களை மறிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான பகுதியில் நின்று வாகனங்களை மறிக்கக் கூடாது எனவும், அப்படி மறிப்பது வீதி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இது ஆபத்து நிறைந்தது எனவும்  பொலிஸாருக்கு எடுத்துக்கூறினாலும் பொலிஸார் கண்டுக்கொள்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US