கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி: விசாரணையில் வெளியான தகவல்
கொழும்பு - அம்புல்கம, பனாகொட வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி மின்கம்பத்தில் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞன் விபத்து ஏற்படும் போது தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜல்தர, லெனகல பிரதேசத்தை சேர்ந்த தெனெத் சக்விதி என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
இந்த விபத்து தொடர்பான திடீர் மரண விசாரணை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்து தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் ஹேமந்த தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
