முல்லைத்தீவில் நீர் நிரம்பி வழியும் குளத்தால் சிரமத்தை எதிர்நோக்கும் மக்கள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள தேராவில் குளம் கடந்த மூன்று மாதங்களாக நீர் நிரம்பி காணப்படுகின்றது.
குறித்த குளத்து நீர் மக்களின் காணிகளுக்குள் புகுந்துள்ளதால் இதுவரை 17 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், குளத்து நீரினை தேக்கங்காட்டு பகுதியூடாக வெளியேற்றுவதற்கு திட்டவரைபு முன்மொழியப்பட்டிருந்தது.
பாலம் அமைக்க நடவடிக்கை
இதற்கமைய, தேராவில் தேக்கங்காட்டு வீதிக்கு குறுக்காக பாலம் ஒன்றினை அமைத்து தேராவில் குளத்து நீரினை வெளியேற்றும் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் முயற்சியால் அதற்கான செலவீனங்களை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளது.
வீதி திருத்தப்பணி
வீதி அபிவிருத்தி அதிகாரசபை பாலம் அமைப்பதற்கான வீதியினை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதற்காக குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் வேலைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில், முல்லைத்தீவு பரந்தன் வீதியில் இடம்பெற்று வரும் வேலை காரணமாக சாரதிகள் வாகனத்தின் வேகத்தினை குறைத்து பயணிப்பதன் ஊடாக விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |