அமெரிக்காவில் பயிற்சி விமானம் மோதி பல வாகனங்கள் சேதம்
அமெரிக்கா- ஜோர்ஜியா மாநிலத்தின் கெய்ன்ஸ்வில்லே (Gainesville) பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானமொன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் தரையிறக்கம் செய்யப்பட்ட போது பல வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Hawker Beechcraft BE-36 ரக ஒற்றை இயந்திரம் கொண்ட இந்த விமானம், கெய்ன்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து
இதனையடுத்து, விபத்துக்குள்ளான விமானம் மீண்டும் விமான நிலையத்திற்குக் கொண்டு செல்ல போதுமான சக்தி (Power) இல்லாததால், குறித்த விமானம் வீதியிலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விமானத்தின் வலது இறக்கை ஒரு வாகனத்தின் மீது மோதி சேதப்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த விபத்தைத் தொடர்ந்து அந்த வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri