புதிய சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்
மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20.2.2024) ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தரமற்ற மருந்து இறக்குமதி
ஜானக வக்கும்புர ஏற்கனவே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில் அதற்கு மேலதிகமாக தற்போது சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து கெஹலிய ரம்புகவெல்ல குறித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் கெஹலிய ரம்புகவெல்ல வகித்திருந்த அமைச்சுப்பதவி தற்போது ஜனக வக்கும்புரவிற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri