கொழும்பில் களமிறங்க 2000 தேரர்கள் அதிரடி தீர்மானம்.. பெரும் சிக்கலில் அநுர அரசாங்கம்
அரசாங்கம் பௌத்த மதத்திற்கு வழங்கும் முன்னுரிமையைக் குறைப்பதாகக் குற்றம்சாட்டி, எதிர்வரும் 20ஆம் திகதி 2,000 தேரர்கள் கொழும்பை முற்றுகையிடவுள்ளனர்.
இவ்வாறு, கல்விச் சீர்திருத்தம் மற்றும் விகாரைகளின் சொத்துகள் தொடர்பான புதிய நடைமுறைகள் பௌத்த மதத்திற்கு எதிரானவை எனச் சித்திரிக்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக மகா சங்கத்தினரை ஓரணியில் திரட்டும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தநிலையில், மத உணர்வுகளைக் கேடயமாகப் பயன்படுத்தி, ஆட்சி மாற்றத்தை விரும்பும் சக்திகள் தேரர்களை முன்னிறுத்தி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைச் சிதைக்க முற்படுவதாக அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய News Insight தமிழ் நிகழ்ச்சி,