செங்கலடியில் நிறைவுக்கு வந்த உண்ணாவிரத போராட்டம்
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலக வீதியில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமானது செங்கலடி பிரதேச செயலாளரால் குளிர்பானம் கொடுக்கப்பட்டு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று ( 20. 02.2024) நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலக வீதியில் மண், கிரவல் அனுமதி பத்திரம் கோரியும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்க கோரியும் நேற்றைய தினம் (19.02.2024) உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பிரதேச செயலாளர் உறுதிமொழி
இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்கலடி பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் போராட்டகாரர்களின் கோரிக்கைகளை ஏற்று குளிர்பானம் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
இதன் போது, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தலையீடு இன்றி மண் அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக செங்கலடி பிரதேச செயலாளர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
மேலும், உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |