பூநகரி அருகே கைவிடப்பட்ட பொதியிலிருந்து 14 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில், பூநகரி வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியொன்றிலிருந்து பெருமளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வீதித் தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், சந்தேகத்திற்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிட முற்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் உத்தரவை மீறி இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்ய
இதன்போது ஒருவர் தன்னிடமிருந்த பொதியொன்றைக் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த பொதியைச் சோதனையிட்ட பொலிஸார், அதற்குள் 14 சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 13 கிலோ 340 கிராம் ஹெரோயின் மற்றும் 1 கிலோ 62 கிராம் ஐஸ் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan