அரசியல் தோல்வியால் கதறும் எதிர்க்கட்சி! - லக்ஷ்மன் யாப்பாவின் குற்றச்சாட்டுக்கு அரசு பதிலடி

Lakshman Yapa Abeywardena Sri Lanka Podujana Peramuna Bimal Rathnayake
By Rakesh Feb 13, 2026 07:46 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எமது அரசு மீது முன்வைத்த விமர்சனங்கள் யாவும், அரசியல் ரீதியாகப் பலமிழந்துள்ள ஒரு தரப்பின் விரக்தியான வெளிப்பாடுகளே என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,

வானிலை மாற்றம் காரணமாக மண்சரிவு எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வானிலை மாற்றம் காரணமாக மண்சரிவு எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

'சட்டத்தின் முன் அனைவரும் சமம்'

'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினாலும், நடைமுறையில் எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே சட்டம் பாய்கின்றது. அரச தரப்பினரின் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார்.

அரசியல் தோல்வியால் கதறும் எதிர்க்கட்சி! - லக்ஷ்மன் யாப்பாவின் குற்றச்சாட்டுக்கு அரசு பதிலடி | Opposition Is Crying Because Of Political Defeat 

இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நீதிமன்றத் தீர்ப்புகளை நாம் கௌரவிக்கின்றோம். அமரகீர்த்தி அத்துகோரலவின் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதை வரவேற்கும் அதேவேளை, 'எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே சட்டம் பாய்கின்றது' என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுக்கின்றோம்

கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட ஊழல் கோப்புகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படுவதால் ஏற்பட்ட அச்சமே இத்தகைய கருத்துக்களுக்குக் காரணம். சட்டம் அதன் கடமையைச் செய்கின்றது, அதில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை.

முன்னாள் ஆட்சியாளர்கள் தேவையற்ற ஆடம்பரங்களுக்காகவும், தனிப்பட்ட பயணங்களுக்காகவும் மக்கள் பணத்தைச் செலவிட்டு ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தினர்.

அரசியல் தோல்வியால் கதறும் எதிர்க்கட்சி! - லக்ஷ்மன் யாப்பாவின் குற்றச்சாட்டுக்கு அரசு பதிலடி | Opposition Is Crying Because Of Political Defeat 

மாவீரர்களுக்கான மரியாதை

ஆனால், தற்போதைய அரசு மிகவும் இக்கட்டான பாதுகாப்புச் சூழல்களிலும், நாட்டின் மிக முக்கியமான பணிகளுக்காகவும் மட்டுமே அத்தியாவசியத் தேவையின் அடிப்படையில் அரச வசதிகளைப் பயன்படுத்துகின்றது.

இதில் எவ்விதமான வீண்விரயமும் இல்லை. சுதந்திர தினத்தை ஆடம்பரமாகக் கொண்டாடி மக்கள் பணத்தை வீணடிப்பதை விட, அதன் அர்த்தத்தை உணர்ந்து எளிமையாக நடத்துவதையே இந்த அரசு விரும்பியது. ரணவிருவர்களின் கௌரவத்தைச் சிதைப்பதாகக் கூறுவது வேடிக்கையானது.

நாட்டின் உண்மையான மாவீரர்களுக்கான மரியாதையை இந்த அரசு எப்போதும் வழங்கும். அவர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் காலம் மலையேறிவிட்டது." - என்றார். 

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

கொழும்பு பொது மயானங்களில் புதிய நடைமுறை : அரசாங்கம் அறிவிப்பு

கொழும்பு பொது மயானங்களில் புதிய நடைமுறை : அரசாங்கம் அறிவிப்பு

 

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US