வானிலை மாற்றம் காரணமாக மண்சரிவு எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மத்திய மாகாணத்தின் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) இந்த அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.
மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்பு
அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதஹேவாஹேட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதஹேவாஹேட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இந்த மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்பு நாளை (14) காலை 6.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்கள் இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.
Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan