கடவுச்சீட்டு அலுவலகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், மற்றும் பிரதிக்கட்டுப்பாட்டாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.
விமான அனுமதிச்சீட்டு வழங்கும் பணிகளும் மீண்டும் ஆரம்பம்
அதன்படி, விமான அனுமதிச்சீட்டு வழங்கும் பணிகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், ஒரு நாள் கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் வழங்குதல் தற்போது வழக்கம் போல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
முக்கிய அறிவுறுத்தல்
அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களத்தின் கிளை வலையமைப்புகளின் செயல்பாடுகளும் தற்போது வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடவுச்சீட்டைப் பெற அவசரத் தேவை இல்லாத எவரும், இன்று (13) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என்றும், அடுத்த திங்கட்கிழமை (16) வருமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
"குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பப் பிழை காரணமாக, ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டுகளை வழங்க முடியவில்லை. இந்த நிலைமையை சரிசெய்ய அலுவலக ஊழியர்களும் தேவையான தொழில்நுட்பக் குழுவும் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri