மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக NPP அரசாங்கம் செயற்படக் கூடாது - ஈ.பி.டி.பி வலியுறுத்து!
தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இன்று(29.06.2026) யாழ். ஊடக அமையத்தில் சமகால அரசியல் நிலை தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி
அத்துடன் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடந்த தேர்தல்களில் தமிழ் மக்களும் வாக்களித்திருந்தனர்.
அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நம்பியே தமிழ் மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தனர்.
மாகாண சபையின் அதிகாரங்களை பலவீனப்படுத்தல்
மாகாண சபையின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது என்பதே அவர்களின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.
ஆனால், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் நாசுக்கான முறையில் மாகாண சபை அதிகாரங்களை பலவீனப்படுத்தும் திட்டத்தோடு அரங்கேற்றப்படுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஒருவகையில் மக்களின் இந்த சந்தேகத்தில் உண்மையும் இருக்கின்றது.
இவ்வாறு பல முயற்சிகள் மத்திய அரசினால் முன்னெடுக்கப்படும் சூழல் உருவான போதெல்லாம், அன்று அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் சாணக்கியத்தால் அவற்றை தடுத்து நிறுத்தி, மாகாண அரசின் ஊடாகவே அந்தத் திட்டங்களை முன்னெடுக்க வழிவகை செய்திருந்தார்.
இன்று அவ்வாறானதொரு அரசியல் ஆளுமை தமிழ் தரப்பில் மத்தியில் இல்லாதுள்ளமையின் வெளிபாடே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan