வரலாற்றில் முதல் தடவையாக நத்தார் பண்டிகை தினத்தில் நடைபெறாத விடயம்
வரலாற்றில் முதல் தடவையாக நத்தார் பண்டிகை தினமன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.
இதுவரை காலமும் நத்தார் பண்டிகை காலத்தில் முன்னிட்டு கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டு வந்தது. எனினும் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை தினத்தின் போது கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.
பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முறை நத்தார் பண்டிகை தினமன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியவில்லை என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலை திணைக்கள ஊடக பேச்சாளர் ஜகத் சந்தன வீரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை சிறைச்சாலை திணைக்களத்திடமிருந்து நீதி அமைச்சு கோரியுள்ளதாகவும் அந்த அறிக்கை ஏற்கனவே அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என சிறைச்சாலை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் பொதுவாக பிரதான நத்தார் பண்டிகை, வெசாக் பௌர்ணமி தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழமை.