அமெரிக்க ஜனாதிபதியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ள உக்ரன் ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் முழுமையான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
டொனால்ட் ட்ரம்பை வார இறுதியில் ஃப்ளோரிடாவில் சந்திக்க உள்ளதாக செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அமெரிக்கா நடத்திய 20 அம்ச அமைதி திட்டம், அதனுடன் தொடர்புடைய அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த தனிப்பட்ட முன்மொழிவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என செலென்ஸ்கி கூறியுள்ளார்.
இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மூத்த ஆலோசகர் ஒருவர் அமெரிக்க அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் மேலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்த பேச்சுகள் தொடர ரஷ்யா உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகளில் “மெதுவான ஆனால் நிலையான முன்னேற்றம்” காணப்படுவதாக ரஷ்யா கூறியிருந்தாலும், கிழக்கு டொன்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் படைகளை வாபஸ் பெற தயாராக இருப்பதாக செலென்ஸ்கி தெரிவித்த யோசனை குறித்து ரஷ்யா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
உக்ரைன், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறது.
மேலும், ரஷ்யா படை பலத்தால் கைப்பற்ற முடியாமல் போன டொன்பாஸ் பகுதிகளில் ஆயுதமற்ற “சுதந்திர பொருளாதார மண்டலம்” (Free Economic Zone) அமைப்பது ஒரு சாத்தியமான விருப்பம் என செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
20 அம்ச திட்டம் 90 சதவீதம் முடிந்துள்ளதாகவும், அனைத்தும் 100 சதவீதம் தயாராக இருப்பதை உறுதி செய்வதே தமது பணி எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நாளையும் இழக்கவில்லை.
உச்ச மட்டத்தில்—அதிபர் ட்ரம்புடன்—சமீபத்தில் சந்திப்பை ஒப்புக்கொண்டுள்ளோம். புத்தாண்டுக்கு முன் பல முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என செலென்ஸ்கி குறிப்பிட்டார்.
இந்த பேச்சுவார்த்தை விவரங்கள் வெளியான சில நேரத்திலேயே, உக்ரைனின் வடகிழக்கேயுள்ள முக்கிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri