பாடசாலை நிகழ்வில் செலவிடப்பட்ட பெருந்தொகை பணம்! குழப்பத்தில் அதிகாரிகள்
தங்காலை பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவ தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வ பேட்ஜ் அணிவிக்கும் விழாவிற்கு ரூபாய் 10 இலட்சத்துக்கு அதிகமான தொகையை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்காக பெற்றோர்களிடமிருந்து எந்தவித கட்டணங்களும் அறவிடக் கூடாது என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்த நிலையிலும் விழாவிற்காக பணம் அறவிடப்பட்டு பெருந்தொகை செலவிடப்பட்டுள்ளது.
கருப்பொருளை மீறிய நாடகம்
இது குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளும் பெரும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு வெளியேயுள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு, தங்காலை வலய கல்வி அலுவலகத்தில் முறையான அனுமதியின்றி மாணவர்களையும் பங்கேற்க செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அந்த நிகழ்வின்போது பாடசாலையின் மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு நாடகத்தை அரகேற்றியிருந்தாகவும், அந்த நாடகம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டிய விடயங்களை மீறிய கருப்பொருளில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam