''சபையில் மரியாதையாக கதைத்து பழகுங்கள்” சிறீதரனுக்கு அர்ச்சுனா எம்.பி வழங்கிய அறிவுரை
யாழ் ஒருங்கிணைப்பு குழுகூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கும் சிறீதரன் எம்.பி இடையே கடும்வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை தகாத வார்த்தைகளால் பேச வேண்டாம் என்று இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.
இன்றைதினம்(26) இடம்பெற்ற யாழ் ஒருங்கிணைப்பு குழுகூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரையாற்றும் போது இளங்குமரன் குறுக்கிட்டார்.
அதன்போது சிறீதரன் எம்.பி அவரை தடுத்தார்.
இடையில் குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி இவ்வாறான தகாத வார்த்தைகளால் அவரை பேச வேண்டாம் என்றார்.
தமிழரசுக்கட்சின் தலைவரும் அதன் பிரதேச சபை உறுப்பினர்களும் இப்படிதான் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.எல்லாவற்றையும் குழப்புவது தான் இவர்களது வேலை என்றார்.
இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam