கிளிநொச்சியில் 16 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகள்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில், கடந்த 16 ஆண்டுகளாக இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த நிலம் விடுக்கப்பட்டுள்ளன.
சுமாராக 25 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்செய்கை மற்றும் மேட்டுநிலக் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.
துரிதப்படுத்தப்படும் கையளிப்பு நடவடிக்கை
விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக, இன்று(26.12.2025) நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இராணுவ உயர் அதிகாரியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள 25 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை உரிய மக்களிடம் விரைவாக கையளிப்பது தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் அடிப்படையில், அதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு, காணிகள் உடனடியாக மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam