மேலும் அதிகரிக்கப்படும் வட்டி! பல கோடி ரூபாய் செலவு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lankan rupee
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
Money
By Mayuri
இலங்கையில் இன்றைய தினம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும், மேலும் பல முக்கிய தகவல்களும் செய்திகளாக தமிழ்வின் தளத்தில் வெளியாகியிருந்தன.
அவற்றில் மிக முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டவர்களாயின் பின்வரும் செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. கடன் அட்டை மூலமான பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் வருடாந்திர வட்டி விகிதம் 36 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தக வங்கிகள் அறிவித்துள்ளன.
மேலும் படிக்க >>> கடன் அட்டை பாவனையார்களுக்கான விசேட அறிவிப்பு
2. ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் படிக்க >>> ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு - பல கோடி ரூபாய் செலவு
3. போராட்டம் நடத்த வேண்டுமாயின் அரசியலமைப்பின் மூலம் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் வரம்புகளை அறிந்து சட்ட ரீதியாகவும் அமைதியான முறையிலும் போராட்டம் நடத்த வேண்டும் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க >>> காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் நள்ளிரவில் நடந்தது என்ன..! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
4. அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல பணிகளில் எந்நிலையிலும் பின்வாங்காது எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் எப்போதும் ஆதரவை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலிமுகத்திடலில் நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் படிக்க >>> அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயார்! சஜித் திடீர் அறிவிப்பு
5. உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 620,940.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க >>> தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு
6. நாடாளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை முன்வைத்துள்ளது.
பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> பிரதமரிடம் சஜித் தரப்பு முன்வைத்த கோரிக்கை
7. தற்போதுள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க >>> போராட்டக்காரர்களுக்கு புதிய பிரதமர் தினேஷ் வழங்கும் அறிவுரை
8. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்தவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும் படிக்க >>> மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள் - ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
9. புதிய ஜனாதிபதி அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்களை நேற்று (22) மாலை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் சம்பந்தமாக தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க >>> காலிமுகத்திடல் தாக்குதல்: வெளிநாட்டு தூதுவர்களுக்கு கடும் தொனியில் விளக்கமளித்த ஜனாதிபதி
10. நாட்டில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி இன்று பிற்பகல் 3 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்தும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வான்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>> நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி! ஜனாதிபதி ரணிலின் கடுமையான உத்தரவு

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US