தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 620,940.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,700 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் கடந்த 21ஆம் திகதி 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,800 ரூபாவாக பதிவாகியிருந்தது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 153,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தும் காரணி

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
முதலீடாக தங்கம்

தங்கம், மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் அது பொருளாதார பாதுகாப்பையும் தருகிறது.
நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும். தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க இலாபம் கிடைத்து வருகிறது.
இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும்.
அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 22 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam