அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயார்! சஜித் திடீர் அறிவிப்பு
அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல பணிகளில் எந்நிலையிலும் பின்வாங்காது எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் எப்போதும் ஆதரவை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலிமுகத்திடலில் நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் தலைவர்களின் ஒன்றுகூடல் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார் ரணில்! |
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் 69 இலட்சம் மக்கள் ஆணை பெற்ற முன்னாள் ஜனாதிபதி கூட மக்கள் கருத்துக்குப் பணிந்து நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி நியமனம்
இதனை இந்நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்துகொள்வது மிகவும் பொருத்தமானது. பின்னர் நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி நியமிக்கப்பட்டார்.
இந்நியமனம் 22 மில்லியன் மக்களின் விருப்பத்தின் பிரகாரமின்றி மாறாக கோட்டாபய ராஜபக்சவுக்குச் சாதகமான தரப்பால் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியாக நாங்கள் மக்கள் கருத்துக்குப் பணிந்து செயற்பட்டோம்.
225 பேரும் ஒன்றே என்ற சமூகக் கருத்து இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல பணிகளில் எந்நிலையிலும் பின்வாங்காது எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் எப்போதும் ஆதரவை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
