நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள் - மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

Sri Lanka Money Postal Strike Sri lanka Post
By Mayuri Feb 08, 2026 03:28 AM GMT
Report

அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை (09.02.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. 

அதன்படி, ஆகக்குறைந்த அஞ்சல் கட்டணம் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் பல்லாயிரம் கோடி ரூபா பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்த மர்ம நபர்

இலங்கையில் பல்லாயிரம் கோடி ரூபா பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்த மர்ம நபர்

விலை மாற்றம்

தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடிதங்கள் மற்றும் பதிவுத் தபால்

• சாதாரண கடிதங்கள்: இதுவரை 20 கிராம் ஆக குறிப்பிடப்பட்ட கடிதங்களுக்கான அடிப்படை நிறை வகுப்பு தற்போது 30 கிராம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கட்டணம் 70 ரூபா ஆகும்.

• பதிவுத் தபால் (Registration): கடிதங்களைப் பதிவு செய்வதற்கான மேலதிக கட்டணம் 60 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ரூ. 60 + 70)

• அரச சேவைகள்: அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்களினால் அனுப்பப்படும் பதிவுத் தபால் கடிதங்களுக்கு (30 கிராம் வரை) ரூ. 130

• கொழும்பு நகர எல்லை: கொழும்பு 1 முதல் 15 வரையான நகர வலயங்களுக்குள் மத்திய தபால் பரிமாற்றகத்தினூடாக விநியோகிக்கப்படும் கடிதங்களுக்கு (30 கிராம் வரை) 50 ரூபா விசேட கட்டணம் வசூலிக்கப்படும்.

நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள் - மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு | Postal Charges Increase  

ஏனைய தபால் சேவைகள்

• தபால் அட்டை (Postcard): ஒரு தபால் அட்டையின் புதிய கட்டணம் ரூ. 40 ஆகும்.

• தபால் அடையாள அட்டை: தபால் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான சாதாரண கட்டணம் ரூ. 50 ஆகவும், ஒருநாள் சேவைக்கான கட்டணம் ரூ. 200 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

பொதி மற்றும் கூரியர்: 250 கிராம் வரையிலான சாதாரண பொதிகளுக்கு ரூ. 150, ‘SL Post Courier’ சேவை ஊடாக அனுப்பப்படும் அதே எடையுள்ள பொதிகளுக்கு ரூ. 200 அறவிடப்படும்.

• அச்சுப் பொருட்கள்: 30 கிராம் வரையிலான அச்சுப் பொருட்கள் அல்லது திறந்த பொதிகளுக்கு ரூ. 45 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

• பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள்: தபால் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளைத் தபாலில் அனுப்புவதற்கு (60 கிராம் வரை) ரூ. 40 அறவிடப்படும்.

சர்ச்சையை கிளப்பிய பௌத்த கொடி அகற்றல் விவகாரம்.. வெளியான உண்மைத்தன்மை

சர்ச்சையை கிளப்பிய பௌத்த கொடி அகற்றல் விவகாரம்.. வெளியான உண்மைத்தன்மை

  

பணம் மற்றும் தந்தி சேவைகள்

• தந்தி (Telemail): தந்தி சேவைக்கான ஆரம்பக் கட்டணம் (முதல் 10 சொற்களுக்கு) ரூ. 50 ஆகவும், மேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ரூ. 5 அறவிடப்படும்.

• பண அனுப்பல் கட்டணம் (Money Orders): தபால் நிலையங்கள் ஊடாக அனுப்பப்படும் பண விநியோகங்களுக்கான (PMT) தரகுப் பணம் (Commission) அதன் பெறுமதிக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, ரூ. 2,000 வரையான பணத்திற்கு ஒவ்வொரு ரூ. 100 இற்கும் ரூ. 2 வீதம் அறவிடப்படும்.

அனைத்து தபால் நிலையங்களும் இந்தப் புதிய கட்டண முறைக்கேற்ப செயற்படுமாறும், பொதுமக்கள் இது குறித்துத் தெளிவுபெறுமாறும் அனைத்து தபால் நிலையங்கள் உள்ளிட்ட தபால் திணைக்களத்தின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் சுற்றுநிருபம் மூலம் தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டப்ளியூ.எம்.ஆர்.பீ.சத்குமாரவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தும் போது புதிய கட்டணங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு அஞ்சல் துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அநுரவின் அதிரடி நகர்வு.. தகர்க்கப்பட்ட ரணில் - மோடி வரலாற்று ஒப்பந்தம்

அநுரவின் அதிரடி நகர்வு.. தகர்க்கப்பட்ட ரணில் - மோடி வரலாற்று ஒப்பந்தம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US