மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள் - ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்தவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது பாடசாலை மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களிலும் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வான்களுக்கு எரிபொருள் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சருக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam