கடன் அட்டை பாவனையார்களுக்கான விசேட அறிவிப்பு
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
கடன் அட்டை மூலமான பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் வருடாந்திர வட்டி விகிதம் 36 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தக வங்கிகள் அறிவித்துள்ளன.
ஏப்ரல் 8 அன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி வீத வரம்புகளை நீக்க முடிவு செய்தது. அந்த முடிவிற்குப் பிறகு, அதுவரை 18 வீதமாக இருந்த கடன் அட்டை வட்டி 24வீதமாகவும் ஆகவும் பின்னர் 30 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று கடன் அட்டைகளுக்கான வட்டி 36 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிக வட்டி விகித சூழலில், வாடிக்கையாளர்கள் கடன் அட்டைகளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.