போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சி.ஐ.டியிடம் முறைப்பாடு

CID - Sri Lanka Police Sri Lanka
By Sivaa Mayuri Jan 28, 2024 09:34 PM GMT
Report

வலிப்பு நோய்க்கு எதிரான சோடியம் வோல்ப்ரோயேட் 100 மில்லி கிராம் மாத்திரைகளுக்காக அனுப்பப்பட்ட ஆவணங்களில் “போலி” பதிவு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் என்.எம்.ஆர்.ஏ என்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகம், குற்றப்புலனாய்வுத் துறையிடம் முறைப்பாட்டை செய்துள்ளது.

இதனையடுத்து உள்ளூர் உற்பத்தியாளரால் தயாரிக்கப்படும் இந்த வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பெல்ஜியத்தில் கார் மீது இலகுரக விமானம் மோதி விபத்து: இருவர் பலி

பெல்ஜியத்தில் கார் மீது இலகுரக விமானம் மோதி விபத்து: இருவர் பலி

ஊழல் தொடர்பில் முறைப்பாடு 

குறித்த மாத்திரையின் உள்ளூர் உற்பத்தி நிறுவனமான, நியூஜென் லங்கா ஹெல்த்கேர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமும் இது தொடர்பில் தமது முறைப்பாட்டை குற்றப் புலனாய்வுத் துறையிடம் அளித்துள்ளது.

ஏற்கனவே போலியான இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பில் ஏராளமான ஆவணங்கள் என்.ஆர்.எம்.ஏக்கு சரி பார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளன.

போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சி.ஐ.டியிடம் முறைப்பாடு | Newdrug Scam Concerned Companies Complaint Cid

இந்தநிலையில் "கொஸ்ட்ரோ - ரெசிஸ்டண்ட் சோடியம் வொல்ப்ரோயேட் மாத்திரை 100 மில்லி கிராமுக்காக நியூஜென் லங்காவிற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பதிவுச் சான்றிதழில் முரண்பாடுகளைக் கண்டறிந்ததை அடுத்தே புதிய பிரச்சினை வெளியாகியுள்ளது.

சோடியம் வோல்ப்ரோயேட் 200 மில்லி கிராம் மாத்திரைகளுக்கு மட்டுமே நியூஜெனிடம் செல்லுபடியாகும் உரிமம் இருப்பதாக என்.ஆர்.எம்.ஏ கண்டறிந்துள்ளது.

அதேநேரம் 100 மில்லிகிராமுக்கு உரிமம் கோரி தமது நிறுவனம் விண்ணப்பித்திருந்தபோதும், அது இன்னும் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள நியூஜென் நிறுவனம், தம்மால் ஆவணம் எதுவும் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சி.ஐ.டியிடம் முறைப்பாடு | Newdrug Scam Concerned Companies Complaint Cid

போலிச் சான்றிதழ்

இந்தநிலையில் எம்.எஸ்.டி என்ற சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப்பிரிவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போலிச் சான்றிதழ், "உண்மையான நகல்" என்று ஒரு சட்டத்தரணி ஒருவரால் சான்றளிக்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து என்.ஆர்.எம்.ஏ நிறுவனம் சோடியம் வொல்ப்ரோயேட்டின் அனைத்து வலிமை கொண்ட மாத்திரைகளையும் உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்துள்ளது.

போலி மருந்து ஊழல் விவகாரம்: சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சி.ஐ.டியிடம் முறைப்பாடு | Newdrug Scam Concerned Companies Complaint Cid

இதற்கு மத்தியில் எம்.எஸ்.டி என்ற சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப்பிரிவு கோப்புகளில் இருந்த போலி ஆவணம் எப்படி அங்கு வந்தது என்பதும் யார் அதனை சமர்ப்பித்தது என்பது இதுவரை தெரியவரவில்லை. 

பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்ட பாதி தகனம் செய்யப்பட்ட உடல்

பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்ட பாதி தகனம் செய்யப்பட்ட உடல்

மாலைதீவு நாடாளுமன்றத்தில் கடும் மோதல்: பரவும் காணொளி

மாலைதீவு நாடாளுமன்றத்தில் கடும் மோதல்: பரவும் காணொளி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US