சுவிட்சர்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் முதல் நாளிலேயே இரு நாடுகளுக்கும் இடையே "ஊக்கமளிக்கும் வகையிலான முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாகத் தூதரக மத்தியஸ்தர்களான பாகிஸ்தானும் கத்தாரும் அறிவித்துள்ளன.
இதன் முக்கியப் பகுதியாக, அடுத்த 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் ஓர் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான விரிவான "பயணக் வரைபடம்" ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், லெபனானில் இராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைப்பதை உறுதி செய்வதற்காக, இரு தரப்பிலும் ஒரு சிறப்புக் குழு அமைக்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தையின் மூலம் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது ஆகிய விவகாரங்களில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பகாய் தெரிவித்துள்ளார்.

சுமார் 18 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், ஈரானிய எண்ணெய் விற்பனை, அதற்கான முறையான உரிமங்களை வழங்குதல் மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம்
இருப்பினும், பேச்சுவார்த்தையின் நடுவே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல் அறிக்கைகள் காரணமாக ஈரானியக் குழு தற்காலிகமாக வெளிநடப்பு செய்ததால் சற்றே பரபரப்பு நிலவியது.பின்னர் மத்தியஸ்தர்கள் மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான முறையான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள ஈரான், அமெரிக்கா தனது கடமைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க முடியாது என்றும், இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam