சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பனை உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
மன்னார் - தரவன் கோட்டை பகுதியில் உள்ள பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றின் உற்பத்திப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்படுவதாகக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைவாக பொது சுகாதார பரிசோதகர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையத்தில் பனங்கள்ளு பயன்படுத்தி சில பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த பொருட்கள் தயாரிப்பில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை - வெளியாகியுள்ள புதிய தகவல்
பல்வேறு சுகாதார குறைபாடுகள்
இந்த நிலையில், அங்கு சென்ற மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார பரிசோதகர்கள் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, குறித்த நிலையத்தில் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கப்படும் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, குறித்த வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற சுகாதார சீர்கேடுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







கத்தாரின் முக்கிய எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடிவிபத்து - 54 பேர் காயம்: பலர் மாயமாகியுள்ளதாக தகவல்
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam