நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளுக்கு அம்பர் நிற எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' நிறத்திலான அவசர எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலை நிலவுவதன் காரணமாக இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகள் மற்றும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் வரை இருக்கும்.
எச்சரிக்கை
குறிப்பிட்ட கரையோரக் பகுதிகளில் காற்று அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரையான வேகத்தில் பலமாக வீசக்கூடும்.

இதன் காரணமாக இந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
You may like this..
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam