ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட மனு! நீதிமன்றம் வழங்கிய அனுமதி
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதி அற்றவர் என உத்தரவிடக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் உத்தரவு
குறித்த மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றி வருவதாகவும், எனவே அரசியலமைப்பின் பிரகாரம் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகைமையற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.