இளம்பெண் மர்ம மரணம்! அறையில் சிக்கிய கடிதம் - பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கும் பெற்றோர்

Sri Lanka Police Kandy Hospitals in Sri Lanka Crime
By Dhayani Jun 22, 2026 02:52 AM GMT
Report

கண்டி, குண்டசாலை - வராபிட்டிய பகுதியில் வீடொன்றிலிருந்து திருமணமான 23 வயதுடைய இளம் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இளம் பெண்ணின் மரணம் கொலையா அல்லது தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து பொலிஸ் பல விசாரணைகளை நடத்தி வருகின்றது.

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - கொலையாளி தொடர்பில் சகோதரரின் பல அதிர்ச்சி தகவல்கள்

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - கொலையாளி தொடர்பில் சகோதரரின் பல அதிர்ச்சி தகவல்கள்

பிரேத பரிசோதனை

கண்டி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ள பிரேத பரிசோதனை இதனை வெளிப்படுத்தும் என்று பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று (21) தெரிவித்துள்ளார்.

இளம்பெண் மர்ம மரணம்! அறையில் சிக்கிய கடிதம் - பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கும் பெற்றோர் | Death Of A Young Woman In Kundasala

உயிரிழந்த பெண்ணின் கணவருடைய வீட்டில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும், தனது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

"என் மகளின் மரணம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது, ​​அவளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்த ஆணின் தாயும் தந்தையும் வீட்டில் இருந்தனர். என் குழந்தைக்கு என்ன நேர்ந்தது?" என்று தெரியவில்லையென இறந்த பெண்ணின் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இறந்த பெண்ணின் கணவர், தான் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, முந்தைய நாள் (20ஆம் திகதி) அதிகாலையில் வீடு திரும்பியபோது, ​​அவள் தூக்கில் தொங்குவதைக் கண்டதாகவும், பின்னர் கயிற்றை அறுத்து அவளது உடலைக் கட்டிலில் போட்டதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச- ஷானி அபேசேகர விவகாரம்: அலிசப்ரி தெரிவித்த பொய்யான கருத்து

கோட்டாபய ராஜபக்ச- ஷானி அபேசேகர விவகாரம்: அலிசப்ரி தெரிவித்த பொய்யான கருத்து

இறந்த பெண் எழுதியதாக கூறப்படும் கடிதம்

திருமணமாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில், போதைக்கு அடிமையான தனது கணவரின் தொடர்ச்சியான துன்புறுத்தல் குறித்து, இறந்த பெண் பலமுறை பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

கணவரின் தாக்குதல்களால் தொடர்ந்து தன் பெற்றோர் வீட்டிற்குச்சென்று வந்ததாகவும், இதன் காரணமாக விவாகரத்து பெறத்தயாராகி வந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இளம்பெண் மர்ம மரணம்! அறையில் சிக்கிய கடிதம் - பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கும் பெற்றோர் | Death Of A Young Woman In Kundasala

இதற்கிடையில், இறந்த பெண் எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதமும் அவரது கணவரின் குடும்பத்தினரால் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து, இறந்த தங்கள் மகளுடையது அல்ல என்று அப்பெண்ணின் பெற்றோர் கூறுகின்றனர். ​​

இறந்த பெண்ணின் உறவினர்களை சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படாததால், சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் நிலவியிருந்தது.

இச்சம்பவம் குறித்து பலகொல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வெளி நாடுகளுக்கு தப்பிச்சென்ற ஆபத்தான குற்றவாளிகள் - சிவப்பு அறிவிப்புகளுடன் நெருங்கும் அதிகாரிகள்

வெளி நாடுகளுக்கு தப்பிச்சென்ற ஆபத்தான குற்றவாளிகள் - சிவப்பு அறிவிப்புகளுடன் நெருங்கும் அதிகாரிகள்

கோட்டாபய ராஜபக்ச- ஷானி அபேசேகர விவகாரம்: அலிசப்ரி தெரிவித்த பொய்யான கருத்து

கோட்டாபய ராஜபக்ச- ஷானி அபேசேகர விவகாரம்: அலிசப்ரி தெரிவித்த பொய்யான கருத்து

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US