வெளி நாடுகளுக்கு தப்பிச்சென்ற ஆபத்தான இலங்கையர்கள் - சிவப்பு அறிவிப்புகளுடன் நெருங்கும் அதிகாரிகள்
இலங்கையிலிருந்து தப்பிச்சென்று வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவி கோரப்படும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து தப்பிச்சென்று வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள் தொடர்பில் நேற்று (21) கருத்து தெரிவிக்ககும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
சிவப்பு அறிவிப்புகள்
ஆசியநாடுகளில் உள்ள தப்பியோடிய குற்றவாளிகள் நாட்டிற்குத் திரும்பக்கொண்டுவரப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள தப்பியோடிய குற்றவாளிகளைத் திரும்பக் கொண்டுவர முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பாதாள உலக உறுப்பினர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பல்வேறு மோசடி செய்பவர்களைக் கைது செய்வதற்கான சட்டங்கள் இல்லாததால், அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸ் கூறுகின்றது.
அதன்படி, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கையிலிருந்து தப்பியோடிய குற்றவாளிகளை விரைவாக நாட்டிற்கு திரும்பிக் கொண்டுவருவதற்காக, சிவப்பு அறிவிப்புகளை வெளியிடும் ஒரு முறையை இன்டர்போல் விரைவில் செயல்படுத்தும் என்று இலங்கை பொலிஸ் கூறுகின்றது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri