சுரேஷ் சலே தொடர்பில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்! பெரும் கலக்கத்தில் மகிந்தவின் நெருங்கிய சகாக்கள்
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தீவிர விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களை தொடர்ந்தே கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கலக்கமடைந்துள்ள படுகொலையாளிகள்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதைத் தொடர்ந்து படுகொலையாளிகள் கலக்கமடைந்துள்ளனர்.

சுரேஷ் சலே தீவிர விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களை தொடர்ந்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்செல்ல வேண்டிய தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள். மகிந்தவின் சகாக்கள் இவற்றில் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதில் இருந்து ரணில்,சஜித் மற்றும் ராஜபக்சர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள். இதுவரை காலமும் இந்த மூன்று தரப்பினரும் தான் ஆட்சி செய்தார்கள்.
ஊழல்வாதிகளை பாதுகாக்க நடவடிக்கை
மகிந்த ஆட்சிக்கு வந்தால் ரணில் விக்ரமசிங்கவின் காலத்துக்கு ஊழல்வாதிகளை பாதுகாப்பார். இதுவரை காலமும் இதுவே இடம்பெற்றது.
இதன் காரணமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததை இவர்கள் வெறுப்புடன் பார்க்கின்றார்கள்.

சிறைச்செல்ல வேண்டிய தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்து சுரேஸ் சலே கைது செய்யப்பட்டதை தற்போது பிரதான அரசியல் பிரசாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தீவிர விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களைத் தொடர்ந்தே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதைத் தொடர்ந்து படுகொலையாளிகள் கலக்கமடைந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri