பல மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை : பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
நாட்டின் பல மாவட்டங்களுக்கு தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு, ஆகஸ்ட் 06, 2026 அன்று காலை 9:00 மணி முதல் ஆகஸ்ட் 07, 2026 அன்று காலை 9:00 மணி வரை 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலை 2 எச்சரிக்கைகள்
அந்தவகையில் பின்வரும் பகுதிகளுக்கு நிலை 2 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டம் - உடபலத, டோலுவ, மெததும்பர, டெல்தொட்ட, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்கா இஹல கோரளை மற்றும் உடுதும்பர.
கேகாலை மாவட்டம் - அரநாயக்க, தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்டை.
நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் தலவாக்கலை.
இரத்தினபுரி மாவட்டம் - ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி.

பின்வரும் பகுதிகளுக்கும் நிலை 1இன் கீழ் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கேகாலை மாவட்டம் - கேகாலை.
இரத்தினபுர மாவட்டம் - நிவித்திகல மற்றும் குருவிட்ட
அவசரகால சூழ்நிலை
மேலும் தொடர் மழை பெய்யும் பகுதிகளில் மண்சரி, பாறைச்சரிவுகள் போன்ற அபாயகரமான சூழ்நிலைகளைக் குறிக்கக்கூடிய மண் மேடுகளில் ஏற்படும் விரிசல்கள் குறித்து கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசரகால சூழ்நிலை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.