குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை - வெளியாகியுள்ள புதிய தகவல்
மத்திய கிழக்கு போரின் போது அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் இன்னும் நாட்டில் விநியோகிக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் கூறியுள்ளார்.
எனவே, இந்த நேரத்தில் எரிபொருள் விலையைக் குறைக்க இயலாது என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்திருந்தாலும், அதன் பலனை உடனடியாக உள்ளூர் நுகர்வோருக்கு வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
போர்ச் சூழலைத் தணிப்பதற்காக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு பூர்வாங்க உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் விலைகள் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தன.

குறைந்த விலை
இருப்பினும், எரிபொருள் கொள்முதல் செய்வதற்கு இலங்கை மாதாந்திர ஒப்புதல்களையே நம்பியிருப்பதால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு செய்யப்படும் புதிய ஆர்டர்களுக்கு மட்டுமே உலகச் சந்தையில் நிலவும் குறைந்த விலையால் நாடு பயனடையும் என்று அமைச்சர் விளக்கியுள்ளார்.
இதற்கிடையில், எரிபொருள் வழங்கும் செயல்முறை கியூஆர் குறியீட்டு முறைப்படி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan