கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த என். மணிவண்ணன், இன்று (28.09.2026) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
என். மணிவண்ணன் இதற்கு முன்னர் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
அமைச்சின் புதிய செயலாளர்
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் கடந்த சனிக்கிழமை (25) என். மணிவண்ணன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் இன்று தனது புதிய பதவிக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த் Cineulagam