காலியில் புதிய சிறைச்சாலை - நீர்கொழும்பு கைதிகள் இடமாற்றம் தொடர்பில் நீதியமைச்சரின் முக்கிய முடிவு
காலியில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த அரசாங்க மருத்துவமனையொன்று தற்போதைய அவசரத் தேவைகளின் நிமித்தம் புதிய சிறைச்சாலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
காலி - மஹமோதரை பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னைய மகப்பேற்று மருத்துவமனையே தற்போதைக்கு புதிய சிறைச்சாலையாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கைதிகளுக்கான புதிய சிறைச்சாலை
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் அவசரச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 54)-இன் படி, சிறைச்சாலைகள் அவசரச் சட்டத்தின் பணிகளுக்காக அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குகிணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் எஞ்சியிருக்கும் கைதிகளில் பெரும் எண்ணிக்கையிலானோரை மிக விரைவில் குறித்த காலி புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri