பொதுமக்கள் எதிர்ப்பினால் இடைநிறுத்தப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கை
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்கேணி பகுதியில் படைத்துறைக்கு இராணுவ தேவைக்காக காணி சுவீகரிப்பு நடவடிக்கை ஒன்று இன்று இடம்பெறவிருந்த நிலையில் காணி உரிமையாளர் மற்றும் அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எதிற்பினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று (09.07.2026) காலை காணி அளவீடு செய்வதற்காக காணி உரிமையாளர் மற்றும் அயல் காணி உரிமையாளர்களை சமூகமளிக்குமாறு பிரதே செயலகம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் காணி உரிமையாளர், அயல் காணி உரிமையாளர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.

காணி உரிமையாளர் நீண்ட நேரமாக காணியை இராணுவத்திற்கு விற்பனை செய்வதற்கான முயற்சித்திருந்தார். ஆனாலும் இறுதி நேரத்தில் தனது 30 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இருக்கின்ற போதும், 20 ஏக்கர் காணியை மட்டும் அடையாளப்படுத்தி சுவீகரிக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ளாத காணி உரிமையாளர் காணி அளவீடு செய்ய முடியாதென்று நில அளவைத் திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.
இந்நிலையில் காணி அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிலே படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
மருதங்கேணியில் அமைந்துள்ள விஜயபாகு இன்வெண்ட்ரி ரெஜிமெண்ட் தலைமை பணிமனைக்காகவே குறித்த காணி அளவீடு செய்யப்பட இருக்கின்றது.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
அளவீட்டை தடுப்பதற்காக
இந்த காணி அளவு தொடர்பான பொது அறிவித்தல் ஓன்று அளவீடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலே குறித்த அளவீட்டை தடுப்பதற்காக அரசியல்வாதிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.








