ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலம் தொடர்பில் செய்யப்பட்டுள்ள பரிந்துரை
மரண மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலம் தொடர்பில் ஜனாதிபதியிடம் விசேட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைப்பதற்கும், அவர்களுக்கு வீட்டு விடுமுறை வழங்குவதற்கும் பரிந்துரை செய்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் விசேட குழு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளது.
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான முறையான வழிமுறையொன்றை தயாரிப்பதற்காக இந்த விசேட குழு நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால், 10 மாதகால தீவிர ஆய்வுக்குப் பின்னர் இந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப் பட்டுள்ளது.
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிப்பதற்கான கிரமமான திட்டம் குறித்து இதில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த யோசனைகள் விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வழக்குத் தாமதங்களுக்கு முக்கிய காரணமாக அமையும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெறுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய, மாதத்திற்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளைப் பெறுவதற்கான புதிய நடைமுறை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam