டுபாயில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் - பொலிஸாரின் அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Dubai Sri Lanka Police Investigation Crime
By Shadhu Shanker Aug 22, 2026 08:17 PM GMT
Report

டுபாயில் தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான கொண்ட ரஞ்சீ, அல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாத்தே சத்து ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் படையினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட பஸ் லலித் என்பவரை எதிர்வரும் திங்கட்கிழமை (24) இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை குற்றவாளிகள் நால்வர்

கொண்ட ரஞ்சீ, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அல்டோ தர்மே என்பவர் குற்றச்சாட்டு எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் - பொலிஸாரின் அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கை | Four Sri Lankan Criminals Arrested In Dubai

மேலும், கொழும்பு பொரளை – வனாத்தமுல்லை பகுதியில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள வனாத்தே சத்து என்பவரும் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் தரப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஸ் லலித்தை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 அழைத்து வர நடவடிக்கை

இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியவை டுபாய் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி கண்காணிப்பிலும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் வழிகாட்டுதலிலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் - பொலிஸாரின் அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கை | Four Sri Lankan Criminals Arrested In Dubai

மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பஸ் லலித்தை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக டுபாய் சென்றுள்ளனர்.

ஹங்வெல்ல பகுதியில் பல்வேறு கொள்ளை, கப்பம் பெறுதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் பஸ் லலித் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA பரிசோதனையில் புதிய திருப்பம்! அறையில் கிடைக்கப்பெற்ற பொருட்களால் அதிர்ச்சி..

பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA பரிசோதனையில் புதிய திருப்பம்! அறையில் கிடைக்கப்பெற்ற பொருட்களால் அதிர்ச்சி..

மீனுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

மீனுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US